பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை (28.11.2024) இடம்பெற்றுள்ளது.
முதலை பாறை பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து எருமை மாடுகளை மறுபுறம் விரட்டிச் சென்ற நபரை, முதலை பிடித்து இழுத்துச் சென்றதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பசரிச்சேனை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.
அந்த நபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படை முகாம் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.








