அம்பாறை, பொத்துவில், முதலைப் பாறை பகுதியில் கடந்த 28ஆம் திகதி முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பொத்துவில் பச்சரச்சேனையைச் சேர்ந்தவர் ஆவார்.
எருமை மாடுகளை மேய்த்துக்கொண்டு ஆற்றை கடந்து சென்ற நபரை முதலை இழுத்துச் சென்றது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டதாக கடந்த வாரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காணாமல்போனவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டிருந்த நிலையில், கடற்படையினரால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.








