Friday, August 14, 2026
No menu items!

முயற்சி

சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் கடலுக்குள் பாய்ந்த கார்!

இன்றையதினம் யாழ். நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது. யாழில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து இடம்பெறும்போது காரினுள் மூன்று இளைஞர்கள் இருந்தபோதும் எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை. நீண்ட முயற்சியின் பின்னர் கார் கடலில் இருந்து மீட்கப்பட்டது. (யாழ் நிருபர்- கஜிந்தன்)  

கிணற்றில் தவறி விழுந்த இரு யானைகள்: ஒன்று உயிருடன் மீட்பு, மற்றொன்று பலி!

வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் இரண்டு யானைகள் தவறி விழுந்ததில், ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றொன்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் இன்று (25) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கிராம அலுவலருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவர் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும், பொலிசாருக்கும் அறிவித்தார். வனத்துறையினர் பெரும் முயற்சியுடன் ஒரு...

மத்திய மலைநாட்டின் அதிக விபத்து அபாயமுள்ள பகுதிகளில் கால்வனேற்றப்பட்ட வேலிகள் அமைக்க திட்டம்!

இலங்கையின் மத்திய மலைநாட்டின் அதிக விபத்து அபாயமுள்ள பகுதிகளில் சாலையோரங்களில் கால்வனேற்றப்பட்ட பாதுகாப்பு வேலிகளை நிறுவும் திட்டத்தை சாலை மேம்பாட்டு ஆணையம் (RDA) அறிவித்துள்ளது. RDA இன் படி, நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 கிலோமீட்டர் இதுபோன்ற ஆபத்தான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை, இந்த பாதைகளில் 15 கிலோமீட்டர்களில் பாதுகாப்பு வேலிகள் வெற்றிகரமாக கட்டப்பட்டுள்ளன. சாலை...

கொழும்பு நகரத்திற்குள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முகமாக இரவு சந்தை திறக்க திட்டம்!

கொழும்பு நகரத்திற்குள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மே மாத இறுதிக்குள் மரைன் டிரைவில் ஒரு இரவு சந்தையைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையமும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகமும் அறிவித்துள்ளன. இந்த ஆண்டு 3 மில்லியன் வருகை இலக்கை அடைய சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் ஈர்க்கக்கூடிய...

மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் உயிரிழப்பு!

சூரியவெவ ரண்தியகம வீரியகம பகுதியில் மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் 38 வயதுடைய தாயும் அவரது 5 வயது மகனும் என தெரியவருகிறது . நேற்று (05) பிற்பகல் 2.30 அளவில், 5 வயதுடைய சிறுவன், வீட்டின் பின்புறம் கட்டப்பட்டுள்ள வெதுப்பகத்தின் பாதுகாப்புக்காவும் , நிறுத்தப்பட்டிருந்த சிறிய...

சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கான புதிய திட்டம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகளை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க நேற்று (30) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ​​ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் இலங்கையின் விரைவான சுற்றுலா வளர்ச்சியை எடுத்துரைத்ததுடன், புதிய சுற்றுலா வலயங்கள் மற்றும் அரசாங்க ஒத்துழைப்பு உள்ளிட்ட துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டமிடப்பட்ட திட்டங்களை...

பயணி ஷாமி ஷஹீதை கெளரவித்த ஜனாதிபதி!

வெறும் 45 நாட்களில் இலங்கையைச் சுற்றி 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பேருவளையைச் சேர்ந்த ஷாமி ஷஹீத் என்ற இளைஞன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று (28) கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டார். அம்பலாங்கொட, ரன்ன, மிரிஸ்ஸ, ஹம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, சியாம்பலாண்டுவ, பொத்துவில், நிலாவெளி, முலத்தீவு, பரந்தன்,...

உளவு செயற்கைக்கோள் நடுவானில் வெடித்துச் சிதறியது!!

வட கொரியாவின் இரண்டாவது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்தது. வட கொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இயந்திரக் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்ததாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திரவ ஒக்சிஜன்,பெட்ரோலிய இயந்திரத்தில் வெடிப்பு ஏற்பட்டது என்று முதற்கட்ட பரிசோதனையில்...
- Advertisement -spot_img

Latest News

மிருகத்தனமாக தாக்கப்பட்டு கைவிடப்பட்ட சிறுமி மீட்பு

மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 4 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று (13)வத்தேகம - யட்டிரவண வீதியில் உள்ள...
- Advertisement -spot_img