யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
புதிய செய்திகள்
வடபகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்..!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் மே 18ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன் முதல் நிகழ்வு இன்று (12) திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில்...
உள்நாட்டுச்செய்திகள்
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு நேற்றைய தினம் (28/04/2025) மிக சிறப்பாக இடம்பெற்றது.
பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நேற்று காலை இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலைப்பீட வரலாற்றை வெளிப்படுத்தும் நூலொன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம்,...
உள்நாட்டுச்செய்திகள்
பொலிஸாரின் நிபந்தனையுடன் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் நடைபவனி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் "வேரிலிருந்து விழுது வரை" ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி இன்றையதினம் நடைபெற்றது.
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணி மற்றும் நடைபவனி மேற்கொள்வதற்கு தடை விதித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து தேர்தல் சார்ந்த நடைபவனி அல்ல என பொலிஸாருக்கு...
உள்நாட்டுச்செய்திகள்
மிலேச்சத்தனமான பகிடிவதைக்குள்ளான யாழ். பல்கலைக்கழக மாணவன்..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான பகிடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாணவனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும், பகிடிவதைக்கெதிராக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவரின் தந்தையே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில்...
உள்நாட்டுச்செய்திகள்
யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டப் படிப்பில் பட்டம் பெற்ற பௌத்த துறவி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21/03/2025) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது, சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த துறவி ஒருவர், தமிழில் பட்டப் படிப்பின் தகைமைக் கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து பட்டம் பெற்றுள்ளார்.
இந்தக் கற்கை நெறியை உயர்பட்டப்படிப்புகள் பீடம் நடத்தியது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்...
உள்நாட்டுச்செய்திகள்
ஆசிரியர் சங்கத் தலைவராக விக்னேஸ்வரன் தெரிவு..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக கலைப்பீடத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி ரி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் சங்கத்தின் ஒத்திவைக்கப்பட்ட நிர்வாகசபைத் தெரிவு நேற்று (28/02/2025) காலை இடம்பெற்றது. இந்தத் தெரிவின் போது 39 மேலதிக வாக்குகளைப் பெற்றுத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
கல்வித்துறையைச் சேர்ந்த ஆர். சர்வேஸ்வரா செயலாளராகவும், வணிகத்துறையைச் சேர்ந்த ஆர். கஜானந்தனும் தெரிவு...
உள்நாட்டுச்செய்திகள்
யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் – மாணவருக்கு நேர்ந்த கதி..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட
புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (09/02/2025) பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதன்போது நான்காம் வருட மாணவர்களுக்கும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையே மூண்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மாணவர்...
உள்நாட்டுச்செய்திகள்
யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு ஆரம்பம்..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை, இந்தியாவின் புகழ் பூத்த சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் 'முறை செய்' என்ற தலைப்பில் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் நடாத்துகின்றது. இந்த மாநாடானது இன்றும் (25/1/2025) நாளையும் (26/1/2025) நடைபெறவுள்ளது.
மாற்றத்திற்கான கருவியாக...
உள்நாட்டுச்செய்திகள்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு பெருகும் ஆதரவு!
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (24.01.2025) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இந்த போராட்டத்திற்கு அறிக்கை ஒன்றின் மூலம் ஆதரவு வழங்கியுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
பல்கலைக்கழக மாணவர்களே நாளைய எமது சமுதாயத்தின் தூண்கள். பல்கலைக் கழகங்கள்...
உள்நாட்டுச்செய்திகள்
யாழ். பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன்விழா ஆண்டின் தொடர் நிகழ்வுகளில் ஒன்றாகவும், பல்கலைக்கழக சர்வதேச மாநாட்டுத் தொடரின் ஓர் அம்சமாகவும் இந்த இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 9 மணியளவில் மாநாட்டின் அழைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். நிரோஷன் தலைமையில் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


