Saturday, November 7, 2026
No menu items!

யாழ்ப்பாணம்

முப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவிற்கான பாராட்டு விழா…

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டத்தின் முப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவிற்கான பாராட்டு விழா யாழில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றையதினம் (19.11.2024) இடம் பெற்றது. நிகழ்வில் விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், யாழ்ப்பாணம் போதனா...

யாழில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் சுற்றிவளைப்பு…!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று (16.11.2024) காலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது. இதன்போது, 166 லீட்டர்கள் கோடா, 10.5 லீட்டர் கசிப்பு என்பவற்றுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய இரண்டு பெரிய கொள்கலன்கள், இரண்டு சிறிய கொள்கலன்கள், இரண்டு செப்பு...

தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். அத்துடன் கடந்த 2020...

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 80,830 இலங்கை தமிழரசு கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -63,327 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-27,986 சுயேச்சைக் குழு 17 பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-27,855 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பெற்றுக்கொண்ட வாக்குகளின்...

பருத்தித்துறை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் இன்று (12.11)அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். அவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி குறித்து கேள்வி எழுப்பிய சுமந்திரன்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து பேரூந்து சுமைகளை ஏற்றிச் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நடவடிக்கை குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏதோ விசித்திரமான காரணத்திற்காக ஜனாதிபதி நேற்று மாலை சில ஆயிரம் பேரை பஸ்களில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து...

யுத்தம் இல்லாத நாட்டை உருவாக்கவும் நாட்டை கட்டியெழுப்பவும் யாழ்ப்பாணம் தேவை; ஜனாதிபதி…

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் சரியாக செல்லவில்லை. தேர்தலுக்கு பின்னர் எமது காரியாலயம் நிரம்பி வழியத் தொடங்கியது. இதன் பலன் நேற்று (10.11.2024) ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க...

அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது…!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது குறித்த மீனவர்கள் கைதானதுடன், அதன்போது 3 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு,...

யாழில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் 07 வருடங்களின் பின் கைது..!

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட நபர் 07 வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வருவதாக வெளியுலகுக்கு நம்ப வைத்துக்கொண்டு , இரவு வேளைகளில் மனைவி பிள்ளைகளை சந்திக்கச் சென்ற நிலையில்...

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம்; எம்.ஏ.சுமந்திரன்!

புதிய அரசியலமைப்பில் தாங்கள் எதிர்பார்த்துள்ள மாற்றம் உள்வாங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு தேர்தல் வருகிறது ஒரு மாற்றத்திற்கான தேர்தல் என்று சொல்லப்படுகிறது. அந்த மாற்றத்தின் ஆரம்பம் ஜனாதிபதித் தேர்தல்...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img