யாழ்.தென்மராட்சி கொடிகாமம் நாவலடிப் பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடாது தேங்கி நிற்கும் பிரதேசத்தை ரயில்வே திணைக்கள அதிகாரிகள் இன்று (19.12.2024) காலை பார்வையிட்டனர்.
மக்களின் கோரிக்கைக்கிணங்க வெள்ளநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்ட அதிகாரிகள் மக்களுடன் கலந்துரையாடியதுடன் இனிவரும் காலப்பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








