Sunday, November 8, 2026
No menu items!

ரணில் விக்கிரமசிங்க

ரணில் மற்றும் மஹிந்தவை முடிந்தால் கைது செய்து பாருங்கள் – சாமர சம்பத் சவால்..!

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை முடியுமால் கைது செய்து பாருங்கள் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10/04/2025) இடம்பெற்ற பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள சித்திரவதைக்கூடங்கள், சட்டரீதியற்ற தடுப்பு நிலையங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றினை விசாரணை செய்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான...

முன்னாள் ஜனாதிபதிகள் சந்திக்க முடிவு..!

நான்கு முன்னாள் ஜனாதிபதிகள் வருகின்ற திங்கட்கிழமை (07) பிற்பகல் கொழும்பில் ஒரு கலந்துரையாடலுக்காக சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இவ்வாறு சந்திக்க உள்ளனர். மேலும், இலங்கை மீது அமெரிக்கா விதித்த 44 சதவீத வரிகள் மற்றும் அதற்கு பதிலளிக்கும்...

இந்தியாவின் உதவி நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சியடையாது; ரணில் விக்கிரமசிங்க!

இந்தியாவின் ஆதரவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் உதவி நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சியடையாது என்று கூறியுள்ளார். ஒரு நிகழ்வில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்கே, இந்தியாவின் ஆதரவு நிராகரிக்கப்பட்டால், இலங்கை வளர்ச்சியடையாது, ஆனால் 2050 இல் இன்னும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படும் என்றார். "இந்தியா நமது நெருங்கிய அண்டை நாடு. அது அமெரிக்கா, ரஷ்யா...

நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டால் உதவுவதற்கு ரணில் தயார் – வஜிர அபேவர்தன!

நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் எவ்வித நிபந்தனையும் இன்றி தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகவே இருக்கின்றார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக வாசிப்பவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வேலைத்திட்டங்களிலிருந்து வெளியேறுவர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (22/03/2025)  இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்...

ரணிலுக்கு சீனத் தூதுவரின் இல்லத்தில் இராப்போசனம்..!

கொழும்பில் உள்ள சீனத் தூதுவரின் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சீனத் தூதுவர் இராப்போசனம் வழங்கியுள்ளார். நாளை திங்கட்கிழமை (24/03/2025) ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு இவ்வாறு இராப்போசனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

ரணில் மற்றும் மஹிந்தவிற்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட உரிமை இல்லை – ரில்வின் சில்வா!

ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தார்மீக உரிமை இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இந்தத் தேர்தலை நடத்த முடியாத படி அவர்கள் செயற்பட்டனர். இந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர்களுக்குத் தார்மீக உரிமை...

பட்டலந்த அறிக்கை குறித்து வாய்திறந்தார் ரணில்..!

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது ஆர்வம் இல்லை சர்வதேச விவகாரங்கள் பட்டலந்தையை விட சுவாரஸ்யமாக உள்ளன என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நான் எப்போதும் ஜனநாயகம் குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளேன், அந்த அந்த விடயத்தை பொறுத்தவரை நான் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றேன்,அதனை பற்றி மேலும்தெரிவிப்பதற்கு எதுவுமில்லை. இது 25...

பட்டலந்த அறிக்கை பற்றி கதைப்பதற்கு ரணில் காலம் தாழ்த்திவிட்டார் – நளிந்த ஜயதிஸ்ஸ..!

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது கதைப்பதற்கு கால தாமதம் ஆகிவிட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் நேற்று (3/16/2025) தெரிவித்துள்ளார். வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், ஏப்ரல் 10 மற்றும் மே மாதங்களில்...

ரணிலின் லண்டன் விஜயத்துக்கு 160 இலட்சம் ரூபா செலவு – விசாரணை அவசியமென்கிறார் பிமல்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளது. அதற்காக அவர்கள் இவர்கள் வெட்கப்பட வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் இந்த நிதி குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டுமென  சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வெளிவிவகாரத் துறை அமைச்சரிடம்...

ரணில் தலைமைத்துவத்திலிருக்கும் வரை UNPக்கு எழுச்சியில்லை – அஜித் பி பெரேரா..!

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சி இன்னும் பூச்சி நிலைக்கு வீழ்ச்சியடையும். அவர் தலைமைத்துவத்திலிருக்கும் வரை அக்கட்சிக்கு எழுச்சியில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை (13/03/2025) ஊடகங்களுக்கு கருத்துவெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசிய கட்சியுடன் கட்சி என்ற...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img