Thursday, November 19, 2026
No menu items!

வடக்கு மாகாண ஆளுநர்

சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான கிளி முயற்சியாளர் சந்தை திறந்து வைப்பு!

வடக்கு மாகாணம் தொடர்ந்தும் எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது. நாங்களும் முன்னேறவேண்டும். இங்குள்ள சிறுதொழில் முயற்சியாளர்கள் நீங்கள் முன்னேறி எமது மாகாணத்துக்கு பெருமையைத்தேடி தரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான 'கிளி முயற்சியாளர் சந்தை' வெள்ளிக்கிழமை (21.03.2025) திறந்து வைக்கப்பட்டது. இந்தச்...

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்..!

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (17.03.2025) இடம்பெற்றது. பருத்தித்துறை ஆதார மருத்துவமனை, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை, மாங்குளம் ஆதார மருத்துவமனை, வவுனியா மாவட்ட மருத்துவமனை ஆகியனவற்றில்...

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பொலிஸாருடன் நட்பு – ஆளுநர் குற்றச்சாட்டு..!

சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் பொலிஸாருடன் நட்பாக இருப்பதால், பொலிஸாரிடம் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். இது ஆபத்தான நிலைமை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழா, கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை (16.03.2025) அறக்கட்டளையின் தலைவரும்,...

கிளிநொச்சி குளத்தின் கீழ் சுற்றுலா மையம் திறந்து வைப்பு..!

கிளிநொச்சிக்குளத்தை அண்டிய பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இன்று (12.03.2025) காலை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுற்றுலா மையத்தை திறந்து வைத்தார். கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்புறமாக உள்ள கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உருவாக்கப்பட்ட சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முகமாக கிளிநொச்சி குளத்தினுள் விசைப் படகு துடுப்பு படகு ஆகிய பொழுதுபோக்கு சேவைகள்...

நவீன விவசாயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

கிளிநொச்சி மாவட்டத்தின் நவீன விவசாயம் தொடர்பான கலந்துரையாடல் (08.03.2025) இன்று காலை 9.00 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. நவீன முறையில் விவசாயத்தை மேற்கொள்ளும் போது விவசாயிகள் சேதனை பசளையை மேற்கொள்ளும் விவசாயிகள் இயற்கை பசளைக்கும் மாற வேண்டும் இதன்போது விவசாயிகளுக்கும் நன்மைகள் இருந்த போதும்...

பாடசாலை நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை..!

நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் நேரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு பாடசாலை நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று புதன்கிழமை (05/03/2025) மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பில் நெடுந்தீவில் பாடசாலைகளுக்கான ஆசிரிய பற்றாக்குறை தொடர்பிலும், அவற்றினை நிவர்த்தி செய்வது தொடர்பில் புதிய ஆசிரிய...

நெடுந்தீவில் வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் நடமாடும் சேவை ..!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் நடைபெறும் நடமாடும் சேவை புதன்கிழமை (05.03.2025) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் காலை 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. வடக்கு மாகாண சபையின் 5 அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சுக்களின் கீழான அனைத்துத் திணைக்களங்களின் தலைவர்களும்,...

கைத்தொழில்பேட்டைக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்ட ஆளுநர்..!

அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில்பேட்டைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வியாழக்கிழமை (27.02.2025) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். கைத்தொழில்பேட்டையில் இயங்கும் தொழிற்சாலைகளையும் சென்று பார்வையிட்டதுடன் அங்குள்ள தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தார். நீர் விநியோகம் இன்மை மற்றும் முன்னறிவித்தல் இல்லாத மின்தடை காரணமாக பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அதேநேரம் சில தொழிற்சாலைகளின் இயந்திரங்களை இயக்குபவர்களை பழக்குவதற்கு இந்தியாவிலிருந்தே ஆட்களை வரவழைக்கவேண்டியிருப்பதாகவும்...

பால்நிலை கொள்கை ஆவணம் தொடர்பான கலந்துரையாடல்..!

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சால், வடக்கு மாகாணத்துக்குரிய 'பால்நிலை கொள்கை ஆவணம்' தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்தக் கொள்கை வரைவை முன்வைத்து அது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர்...

மற்றையவர்களுக்கு உதவுவது ஆண்டவனுக்குச் செய்யும் சேவை – ஆளுநர்..!

எங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது நாம் மனதார இறைவனை வேண்டினால் நிச்சயம் எங்களுக்குப் பலன் கிடைக்கும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையம் ஏற்பாடு செய்த, மகிமை வாய்ந்த 12 ஜோதிலிங்க குலங்களில் முதன்மையானதாக விளங்கும் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சோமநாதர் ஜோதிலிங்க வழிபாடு நேற்று திங்கட்கிழமை காலை...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்க தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் இன்று (18) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் பொதுவான...
- Advertisement -spot_img