Thursday, November 19, 2026
No menu items!

வடக்கு மாகாண ஆளுநர்

விதிகளை மீறும் அழகு நிலையங்களின் உரிமம் இரத்து – ஆளுநர்..!

வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகு நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அழகக சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (21.02.2025) நடைபெற்றது. ஒரு சில அழகக நிலையங்கள் சங்கத்தின்...

தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது – ஆளுநர் வலியுறுத்தல்..!

தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது. தொழிற்சங்கங்களும் உரியவகையில் சேவையாற்றிக்கொண்டே அதை மேம்படுத்தும் வகையில் தங்களுக்கான தேவைப்பாடுகளை கோரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கம் என்பனவற்றின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண...

வாடகை பேருந்துகள் தொடர்பில் கொள்கை ஆவணம் தயாரிக்குமாறு ஆளுநர் பணிப்பு..!

வடக்கு மாகாணத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு சேவையில் ஈடுபடும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக கொள்கை ஆவணத்தை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் பொதுமுகாமையாளர் ஆகியோரைப் பணித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை காலை (20.02.2025) வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட...

வடக்கு மாகாணத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்..!

வடக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குமான வாக்குப்பணக்கணக்கில் (vote on account) முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை (18.02.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி,...

தமிழ்மொழி மூலமான பயிற்சி வகுப்புக்களை ஊக்குவிக்கும் பிரதமர்..!

இந்தப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களும் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழி மூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு பிரதமர் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை (16.02.2025) சென்றிருந்தார். அங்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோருடன், ஜேர்மன் பயிற்சி...

வட மாகாணத்தின் தேவைப்பாடுகள் குறித்து கனேடியத் தூதுவருக்கு எடுத்துரைத்த ஆளுநர்..!

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் எடுத்துரைத்தார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை (14.02.2025) சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போது, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள்...

மாற்றத்துக்கு எல்லோரும் தயாராக வேண்டும் – வேதநாயகன் வலியுறுத்தல்..!

கடந்த காலங்களில் தவறாக ஒரு விடயம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதையே தொடர்வதற்குத்தான் பலர் விரும்புகின்றார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு யாரும் தயாராக இல்லை. தவறானது என்று தெரிந்தால் அதை முடிவுக்கு கொண்டு வந்து சரியானதைச் செய்யவேண்டும். இந்த மாற்றத்துக்கு எல்லோரும் தயாராகவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின்...

எமது மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும் – வேதநாயகன்..!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டைக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அதைப்பயன்படுத்தி எமது மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்துகொள்ளவேண்டும். இதைப்போன்றதொரு சந்தர்ப்பத்தை நாம் இழக்கக் கூடாது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நோய்தடுப்பு பராமரிப்பு சேவைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டும்...

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினருடன் ஆளுநர் விசேட கலந்துரையாடல்..!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (13.02.2025) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், பிரதியமைச்சருமான பிரதீப் சுந்தரலிங்கம், ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும்,...

நிவாரணங்கள் தொடர்ந்தும் கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறு – ஆளுநர்..!

வாழ்வாதார மேம்பாட்டுக்காகத்தான் உதவிகள் - நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. அதைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் தொடர்ந்தும் அவை கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. கிடைக்கின்ற உதவிகள் - நிவாரணங்களைப் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையை நிலைபேறாணதாக மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். உலக உணவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு...
- Advertisement -spot_img

Latest News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில்...
- Advertisement -spot_img