Sunday, November 8, 2026
No menu items!

வர்த்தமானி

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை சில கட்சிகள் இதுவரையில் வழங்கவில்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்சிகளின் செயலாளர்களால் அனுப்பப்பட்டுள்ள பெயர்கள் மாத்திரம் இதுவரையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன அதிகாரம் கட்சி, இலங்கை தமிழரசு கட்சி ஆகியன தங்களது கட்சிக்கான தேசியப் பட்டியல்...

ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாது; ஆர். எம். ஏ.எல். ரத்நாயக்க!

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பான சர்ச்சைகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் இணையவழி பதிவு ஆரம்பம்…!

பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் இணையவழி பதிவு இன்று (17.11.2024) முதல் வரும் 20ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாகவும் குறித்த நாட்களில் பாராளுமன்ற வளாகத்திற்கு சென்று பதிவு செய்ய முடியுமெனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இதேவேளை, தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட...

புதிய பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் மூன்று நாள் செயலமர்வு நடத்த திட்டம்..!

பத்தாவது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற மரபு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் மூன்று நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு  இம்மாதம் 25, 26, 27 ஆகிய திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று சனிக்கிழமை (16) வெளியிடப்படவுள்ளது. புதிய...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக தளங்களையும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட தேர்தல் ஆணையம், செப்டம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை, தேர்தல் செய்திகளை வெளியிடுவதற்கான ஊடக வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. அனைத்து அச்சு, ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல்...

எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றம்; ஜனாதிபதி அறிவிப்பு!

புதிய பாராளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்தல் விடுத்துள்ளார். “இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியான அனுரகுமார திஸாநாயக்க, நான், இந்த பிரகடனத்தின் மூலம், நவம்பர் இருபத்தி ஒன்றாம் திகதி, இரண்டாயிரத்து இருபத்தி நான்காம் ஆண்டு, ஸ்ரீ ஜயவர்தனபுர நாடாளுமன்றத்தில் காலை...

சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (AFS) மற்றும் போர்சின் இனப்பெருக்க மற்றும் சுவாச நோய்க்குறி (PRRS) கண்டறியப்பட்டதன் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் அபாயகரமான பகுதிகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ளது. வர்த்தமானியின் பிரகாரம், ஒவ்வொரு பிரதேச செயலகமும் பாதிக்கப்பட்ட பிரதேசமாக அல்லது தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும்...

மனித பாவனைக்கு உதவாத 53 கொள்கலன் அரிசித் தொகை விடுவிக்கப்படாத நிலையில்!

மனித பாவனைக்கு உதவாத 53 கொள்கலன் அரிசித் தொகை ஆறு வருடங்களாக சுங்கப் பிரிவில் விடுவிக்கப்படாமல் இருப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையில் தெரியவந்துள்ளது. குறித்த அரிசித் தொகையின் பெறுமதி 18 கோடியே 60 இலட்சத்து 58 ஆயிரத்து தொள்ளாயிரத்து 22 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் காரணமாக இந்த...

பொதுத்தேர்தலில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு இன்னும் ஒதுக்கப்படாத சின்னங்களும் வர்த்தமானியில் உள்ளன. செப்டம்பர் 28, 2024 தேதியிட்ட, வர்த்தமானி 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி: http://documents.gov.lk/files/egz/2024/9/2403-66_E.pdf  

சுற்றுலா விசா கட்டணத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் மீள அமுல்படுத்தப்படும்!

39 நாடுகளுக்கான சுற்றுலா விசா கட்டணத்தை ரத்து செய்வதற்கான அமைச்சரவை தீர்மானம் கூடிய விரைவில் மீள அமுல்படுத்தப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை மீள அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியின் அதிகாரம் குறித்து தற்போது...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img