பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் இணையவழி பதிவு இன்று (17.11.2024) முதல் வரும் 20ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாகவும் குறித்த நாட்களில் பாராளுமன்ற வளாகத்திற்கு சென்று பதிவு செய்ய முடியுமெனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் பின்னர், தேர்தல் ஆணைக்குழு குறித்த பெயர் பட்டியலை வர்த்தமானியில் வெளியிட அரசு அச்சகத்திற்கு அனுப்பவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here