Monday, June 8, 2026
No menu items!

வாக்குமூலம்

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ CIABOC அறிக்கையில் முன்னிலை!

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலை வகித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு கிடைக்கப்பெற்ற அழைப்பாணையின் அடிப்படையில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையில் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையிலிருந்த போக்குவரத்து காவல்துறையினருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இன்று அவர் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கோட்டை காவல் நிலையத்தில் முன்னிலையானார். இந்தநிலையில் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டேன் பிரியசாத் கொலை – எழுவர் பொலிஸ் காவலில்..!

டேன் பிரியசாத் கொலைச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக காவல்துறையினரால் பெண்கள் இருவர் உட்பட எழுவர் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

CID முன்னிலையில் மைத்திரிபால சிறிசேன!

ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார். அரசியல்வாதிகள் உட்பட பல தனிநபர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்..!

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நேற்றுமுன்தினம் (27/03/2025) இரவு குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 10.00 மணியளவில் குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் அத்துமீறி உள் நுழைந்த அதே பகுதியை சேர்ந்த சிலர் உடமைகளை சேதப்படுத்தியதுடன் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார...

யோஷிதவும் அவரது மனைவியும் பொலிஸ் நிலையத்தில் முன்னிலை..!

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை (21/03/2025) இரவு ஏற்பட்ட மோதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25/03/2025) ஆஜராகியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு யூனியன் பிளேசில்...

தேஷபந்து தென்னகோனின் மனு தொடர்பான தீர்மானம் இன்று அறிவிப்பு!

தாம் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவிடக் கோரி முன்னாள் காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னகோனினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப்பேராணை மனு தொடர்பான தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது. இத்தகைய பின்னணியில், இந்த வழக்குடன் தொடர்புடைய மேலும் ஆறு சந்தேகநபர்களும் தங்களைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி நீதிப்பேரணை மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக காவல்துறை...

வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் CID முன்னிலையில்!

வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெலிகம - பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பிலே அவர் வாக்குமூலம் அளித்து வருகிறார். மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நேற்று (04) அவர்...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய நாமல் ராஜபக்ஷ!

வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த ஏர்பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட வந்துள்ளார். மேலும் பேசிய நாமல் ராஜபக்ஷ, இந்த நாட்களில்...

தையிட்டி விகாரை விவகாரம் – ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை..!

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். " தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் .." என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img