Sunday, November 8, 2026
No menu items!

விபத்து

பிரேசில் விபத்து- அதிகரிக்கும் உயிர்ப்பலி..!

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள டோகன்டின் ஆற்றின் மீது உள்ள மேம்பாலம், கடந்த டிசம்பர் மாதம்.,22ம் திகதி திடீரென இடிந்து விழுந்தது. இச்சம்பவம் இடம்பெற்றபோது, குறித்த மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த, 3 லொறிகள் உட்பட 10 வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில்...

புதுவருட கொண்டாட்டத்திற்காக சென்ற தாயும் மகனும் ரயிலில் மோதி படுகாயம்..!

பெந்தோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் மோதியதில் 39 வயதுடைய தாயும் அவரது ஆறு வயது மகனும் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெந்தோட்டை பகுதியில் வசிக்கும் தாயும் மகனும் நேற்று (31.12.2024) இரவு பெந்தோட்டை கடற்கரையில் இடம்பெற்ற வாணவேடிக்கையை கண்டுகளிக்கத்துவிட்டு குடும்பத்துடன் வீடு திரும்பிக்...

விமான விபத்து – பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு..!

தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. குறித்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி, தென்கொரிய - முவான் சர்வதேச விமான நிலையத்தின் சுவரில் மோதுண்டுள்ளது. விபத்துக்குள்ளான போது, குறித்த விமானத்தில் 175 பயணிகளும், 6 பணிக்குழாமினரும் இருந்ததாக தென்கொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும்...

லொறியின் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு..!

லொறியின் பின் சக்கரத்தில் சிக்கி 1 வயது 10 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டபகொல்ல பிரதேசத்தில் நேற்று (28.12.2024) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிறுமி, தாய் மற்றும் தந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற போது, அங்கிருந்த லொறியொன்று புறப்பட்டுச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் படுகாயமடைந்த குழந்தை மஹியங்கனை...

விமானம் விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலி..!

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகித் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை 23 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்திலிருந்து திரும்பிய ஜெஜு ஏர் நிறுவனத்தின் விமானம், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடன்...

பொலிஸ் பரிசோதகர் பரிதாப மரணம்..!

ஹபரணை - திருகோணமலை வீதியின் கல் ஓயா சோதனைச் சாவடியில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் டிப்பர் ரக வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் பொலிஸ் பரிசோதகர், லொறி மற்றும் கார் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் பொலிஸ் பரிசோதகர்...

யாழ் இளைஞன் வவுனியாவில் உயிரிழப்பு..!

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். கோவில்குளம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் அதன் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில்...

செல்ஃபி மோகம் – தாயும் மகளும் பலி..!

அனுராதபுரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அனுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள இரத்தினபுரியிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த 38...

பேருந்து விபத்தில் ஐவர் காயம்..!

கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ டாசன் டவர் பகுதியில் பஸ் ஒன்று மரமொன்றில் மோதி  விபத்துக்குள்ளானாதில் ஐவர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான தெல்தெனிய டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கேளிக்கை வெடிப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை..!

பண்டிகை காலங்களில் சிறார்கள் பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளைப் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்தியர். சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார். பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளைப் பயன்படுத்தும் போது தீ விபத்துக்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பண்டிகை காலங்களினால் ஏற்படும் விபத்துக்களிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img