Sunday, November 8, 2026
No menu items!

விபத்து

யாழில் பேருந்து விபத்து – பயணிகள் பெரும் போராட்டத்தின் பின்னர் மீட்பு..!

அதிநவீன பயணிகள் சொகுசு பஸ்ஸும், சிறிய ரக உழவு இயந்திரமும் (லாண்ட் மாஸ்ரர்) மோதுண்டதில் படுகாயம் அடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் யாழ். தென்மராட்சி, மிருசுவில் A9 வீதியில் இன்று (18.12.2024) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து பயணித்த அதிநவீன சொகுசு பஸ்ஸூம், அதே திசையில் பயணித்த மரப் பலகைகளை ஏற்றிய சிறிய...

சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் ரேஸ் ஓட்டம் – தீவிர சிகிச்சை பிரிவில் இளைஞர்கள்..!

தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் அற்ற நிலையிலும் ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் ஓடி விபத்தில் சிக்கி மூவர் படுகாயமடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி ஏ9 வீதியில் மத்திய ஆரம்ப வித்தியாலயம் சந்தியில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து தலைக்கவசம் அணியாமல் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம்...

நேருக்கு நேர் மோதிய பாரவூர்திகள் – ஒருவர் பலி..!

அநுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (14.12.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தம்புத்தேகமவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த சிறிய பாரவூர்தி ஒன்றும் அநுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த...

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

காலி, கொஸ்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரயில் மார்க்கத்தில் கொழும்பிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (11.12.2024) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் இறுதியாக ஊதா நிற சட்டையும் ,...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – 10 வயது சிறுமி உயிரிழப்பு..!

தெற்கு அதிவேக வீதியில் 100 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் நேற்று புதன்கிழமை (11.12.2024) இரவு இடம்பெற்ற விபத்தில் 10 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதுடன் தாய், தந்தை, மற்றுமொரு மகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டாவையிலிருந்து பயணித்த கார் ஒன்று முன்னால் பயணித்த லொறி ஒன்றின் பின் புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்...

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் லொஹான் ரத்வத்த..!

குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று (07.12.2024) விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவரை வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 லொஹான் ரத்வத்த மீண்டும் கைது..!

மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டிய காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டிய சந்தியில் அவர் செலுத்திய டிபென்டர் ரக வாகனம் எதிர்த்திசையில் பயணித்த மகிழுந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் குறித்த விபத்து...

விபத்தை ஏற்படுத்திவிட்டு காரில் தப்பிச் சென்ற நான்கு சந்தேக நபர்கள்..!

இரத்மலானை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்தினை  ஏற்படுத்தி விட்டு காரில் தப்பிச் சென்ற நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். உடுகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய காரின் சாரதியும் உடுகம்பொல மற்றும் கித்துல்கல பிரதேசங்களில் வசிக்கும் 19, 20 மற்றும் 26 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின்...

மோட்டார் சைக்கிள் செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஏற்பட்ட விபத்து..!

கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் லியனகேமுல்ல பகுதியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவரும் இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ளதாக  சீதுவை பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது...

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழப்பு..!

நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் கோகி மாநிலத்திலுள்ள சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது படகில் 200 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img