Saturday, November 7, 2026
No menu items!

வைத்தியசாலை

லொறியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து தாய் மரணம்!

அநுராதபுரம் - பாதெனிய வீதியில் அம்பன்பொல பிரதேசத்தில் நேற்று (05) இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்துள்ளார். பாதெனியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த லொறியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த தாயும் 10 வயது...

மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க பாடசாலையொன்றில் மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஜோர்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் அப்பலாஜியில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நேற்று 14 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு ஆசிரியர்கள் மற்றும் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 30இற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை...

நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த வைத்திய அதிகாரிகள்!

வைத்தியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும், வைத்தியர்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டு, சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டி வைத்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் நேற்று (03) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள், தற்போதைய அரசாங்கம் இதுவரை வைத்தியர்கள் எதிர் நோக்கும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும்...

அமெரிக்காவில்  துப்பாக்கிச்சூடு நால்வர் பலி..!

அமெரிக்கா, சிகாகோ சுரங்கப்பாதை ரயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்காகிய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மேலும், இத்தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.  

தெற்கு அதிவேக வீதியில் விபத்து; ஒருவர் படுகாயம்….!

தெற்கு அதிவேக வீதியில் 118 கிலோமீட்டர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (31.08) காலை இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் காரானது வேகமாக சறுக்கிச் சென்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த...

வரகாபொல – அம்பேபுஸ்ஸ பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக யுவதியொருவர் உயிரிழப்பு!

நிட்டம்புவ பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் பணிபுரிந்துவந்த குறித்த யுவதி தனது சக ஊழியர்களுடன் விருந்துபசார நிகழ்வொன்றிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பிய யுவதி திடீர் சுகவீனமடைந்த நிலையில் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வரகாபொல - அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 21...

காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு!

யாழில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயரிழந்துள்ளது. தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை 21ஆம் திகதி இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளது. காய்ச்சல்...

12 வயது மாணவனின் செயல்…!

வவுனியா நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவரது உடல் நிலை தேறி வருவதாக பொலிஸார் நேற்று (20) தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலையில் தரம் 7 இல்...

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் !

சிந்துஜாவின் மரணம் தொடர்பில் குற்றமிழைத்தவர்கள் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு, அவர்கள் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும். இல்லை என்றால் நாங்கள் தொடர்ந்தும் மன்னார் வைத்தியசாலைக்கு முன் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். சிந்துஜாவின் மரணம் தொடர்பில் மன்னார் மாவட்ட பொது...

மன்னாரில் ஜனநாயகப் போராட்டம்!

மன்னாரில்  சிந்துஜாவிற்கு நீதி கேட்டு நேற்றைய -தினம் செவ்வாய்க்கிழமை (13) ஜனநாயகப் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி   உயிரிழந்த  திருமதி சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img