Sunday, November 8, 2026
No menu items!

வைத்தியசாலை

மின்பிறப்பாக்கியின் செப்புக் கம்பியை திருட முற்பட்டவருக்கு நேர்ந்த கதி..!

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்பிறப்பாக்கியின் செப்புக் கம்பியை திருட முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் வியாழக்கிழமை (13/03/2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள மக்கெய்சர் விளையாட்டரங்கின் மூலையில் உள்ள மின் பிறப்பாக்கியில் புவித்தொடுப்பு வயரில் இருந்த செப்புக் கம்பியை வெட்டி திருட...

மேர்வின் சில்வா வைத்தியசாலையில் அனுமதி..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உடல் நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேர்வின் சில்வாவிற்கு எந்தவிதமான மேலதிக வசதிகளும் வழங்கப்படாது என காமினி பி திசாநாயக்க தெரிவித்தார். அவருடைய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு மேலதிக நடவடிக்கைகள்...

அநுராதபுரம் பெண் வைத்தியர் தொடர்பான சம்பவத்தில் சந்தேகநபர்  தொடர்பில் வெளிவந்த உண்மை!

அநுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேக நபர் நேற்று இரவு அநுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சந்தேக நபரை நேற்று கல்னேவ ஹெலபதுகம பகுதியில் கல்னேவ காவல்துறையினர் கைது செய்தனர். கல்னேவ காவல்துறையினர் சந்தேக நபர் தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர். தான் சிறைச்சாலையிலிருந்து பிணையில் வெளியில் வந்ததாகவும், பணம் இல்லாமையின் காரணமாக...

உணவு ஒவ்வாமை காரணமாக 53 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 53 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் 6 முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரையில் பயிலும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்பட்ட உணவை உட்கொண்டமையால் மாணவர்களுக்கு நோய் நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 31 மாணவர்களுக்கு நோய்...

பேருந்தின் முன்பக்க மிதிபலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழப்பு!

ருவன்வெல்ல, ஹும்பஸ்வலான பகுதியில் ருவன்வெல்லவிலிருந்து தன்னோருவ நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதிபலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் பேருந்திலிருந்து விழுந்து உயிரிழந்தார். விபத்தைத் தொடர்ந்து அவர் கவலைக்கிடமான நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹும்பஸ்வலான, ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மிதி பலகையில்...

வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு..!

அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10/03/2025) காலை இடம்பெற்றுள்ளது. 2 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று இருப்பதாக அம்பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த...

வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு..!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஆயுதங்களுடன் நடமாடிய நபரொருவர் மீது அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப்பைத் தாக்கத் திட்டமிட்டுக் குறித்த நபர் அங்குச் சுற்றித் திரிந்தாரா என்ற கோணத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு...

மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்..!

கம்பஹா, கிரிந்திவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் கடையொன்றிற்குள் இருந்த குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதன்போது, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

களியாட்ட விடுதி ஒன்றில் துப்பாக்கிச் சூடு – 12 பேர் படுகாயம்..!

கனடாவில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் அடையாளந்தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். டொராண்டோவில் ஸ்கார்போரோ பகுதியில் உள்ள களியாட்ட விடுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தப்பிச்சென்றுள்ள நிலையில் துப்பாக்கிதாரியை கைது செய்யும் நடவடிக்கையில் அந்த நாட்டு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகன் செலுத்திய கார் விபத்துக்குள்ளானதில் தாய்க்கு நேர்ந்த கதி..!

கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7/3/2025) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்த பெண் தனது மகன் மற்றும் அவரது மனைவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​கார் திடீரென நின்றுள்ளது. இதன் காரணமாக, மகன் காரின் முன் சக்கரத்தில் ஒரு கல்லை வைத்து காரை இயக்க முயற்சி செய்துள்ளார்....
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img