Sunday, November 8, 2026
No menu items!

வைத்தியசாலை

இரு தரப்பினருக்கு இடையில் மோதல் – நால்வர் காயம்..!

பதுளை, மீகஹகிவுல,  அக்கல உல்பத பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (06/03/2025) இரவு இடம்பெற்றுள்ளது. மீகஹகிவுல பகுதியில் வசிக்கும் 20 முதல் 51 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா...

தந்தையால் மகனுக்கு நேர்ந்த கதி..!

இரத்தினபுரி, பலாங்கொடை பிரதேசத்தில் தந்தையால் தாக்கப்பட்டு மகன் காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (04/03/2025) மாலை இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மகனே இவ்வாறு காயமடைந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று, மகன் வீட்டினுள் பாடவேலைத்திட்டங்களில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில் சந்தேக நபரான தந்தை தனது மகனின் தலையில் பொல்லால் தாக்கியுள்ளார். பின்னர், சந்தேக நபரான...

இலங்கையில் பிறப்பு வீதம் குறைவு..!

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. வைத்தியசாலைகளில் கர்ப்பிணி தாய்மார்களைப் பதிவு செய்யும் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பிறப்பு வீதமும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் வைத்தியசாலைகளில் கர்ப்பிணி தாய்மார்களைப் பதிவு செய்யும்...

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தாதியர் சங்கத்தினர் போராட்டம்..!

2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27/02/2025) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளதையடுத்து, மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி தாம் எதிர்ப்பினை முன்னெடுத்ததை அவதானிக்க முடிந்தது.   இன்று...

மின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு..!

மொனராகலை - சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடுகம பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக சியம்பலாண்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (26/02/2025) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் சியம்பலாண்டுவ மடுகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஆவார். உயிரிழந்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளை பழுது பார்ப்பதற்காக தனது நண்பனை சந்திக்கச்...

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதி..!

பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிக குளிரான காலநிலையால் குழந்தைகள் உயிரிழப்பு..!

காசாவில் கடந்த சில நாட்களாக குளிரான காலநிலை நிலவுகிறது. காசாவில் அதிக குளிரான காலநிலை நிலவுவதனால் அங்குப் பிறக்கும் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. வைத்தியசாலைகளில் மருந்துகள் , உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி மின்வெட்டு காரணமாக தேவையான சிகிச்சையை வழங்குவதில் சிரமங்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோசமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பான...

உழவு இயந்திர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

நெடுந்தீவில் நேற்று இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நவரத்தினம்  ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்தபோது பிரதேச வைத்தியசாலையினை அண்டியுள்ள மதவடியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு...

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்..!

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது. 88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், சுவாச கோளாறு காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வத்திகான் தேவாலயத்தில்...

நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் – போப் பிரான்சிஸ்..!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் என தனது உதவியாளர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. இரட்டை நிமோனியா என்பது ஒரு கடுமையான தொற்று ஆகும், இதனால் சுவாசிப்பது...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img