Saturday, September 26, 2026
No menu items!

#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalcommentary #vettritv #vettrinews

இலங்கையின் செவிப்புலனற்ற முதலாவது நாடாளுமன்ற உறுப்பினரின் கன்னி உரை..!

இலங்கையின் செவிப்புலன் அற்ற முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இன்று (06.12.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். அவர் தனது முதலாவது பாராளுமன்ற உரையில், 76 வருடங்களின் பின்னர் மாற்றுத்திறனாளியொருவர் இலங்கை நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் அரச தரப்புடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தன்னால் நிரூபிக்க...

பாராளுமன்ற குழுக்கள் நியமிப்பு இன்று..!

நிதிக்குழு உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்களை நியமிப்பு இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கூட்டப்பட்டு திகதிகள் தீர்மானிக்கப்படும் என அவைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் இன்று நிறைவு..!

இந்த முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 8,361 வேட்பாளர்களில் இதுவரை 1,985 பேர் மாத்திரமே வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 690 அரசியல் கட்சிகள்...

நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் முதலாவது இடைக்கால கணக்கு வாக்கு..!

புதிய அரசாங்கத்தின் முதலாவது இடைக்கால கணக்கு வாக்கு, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரச சேவைகளை கொண்டு செல்வதற்கு அவசியமான நிதி இந்த இடைக்கால கணக்கு வாக்கினூடாக ஒதுக்கப்படும். இதற்குக் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி...

மதுபானசாலை குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் – சபையில் சாணக்கியன்..!

நாடாளுமன்றில் நேற்று (04.12.2024) வெளியிடப்பட்ட புதிய மதுபானசாலை அனுமதி பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (05.12.2024) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. எனினும்...

இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு..!

2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ஹரினி அமரசூரிய, இடைக்கால கணக்கு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்ததுடன், இன்றும் நாளையும் இடைக்கால கணக்கறிக்கை மீது விவாதம் நடைபெறும். நாளை மாலை வாக்கெடுப்பு இடம்பெற்று நிறைவேற்றப்பட உள்ளது. இடைக்கால கணக்கு அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார...

தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு..!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (05.12.2024) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள், காணி விடுவிப்பு மற்றும் காணி அபகரிப்பை நிறுத்துதல், தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வை ஏற்குமா அனுர அரசு? – சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி..!

ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் மாகாணசபை தொடர்பாக அண்மையில் வெளிப்படுத்திவரும் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடக அறிக்கையொன்றினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையின் முழு விபரம் வருமாறு, ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் பொழுது மாகாணசபை முறைமைகள் பாதுகாக்கப்படும்...

நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி – கட்சியின் யாழ். அமைப்பாளர் எச்சரிக்கை..!

நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம் பெற்று வருவதாகவும் அவ்வாறு பொய்கூறி வருபவர்களை நம்ப வேண்டாம் எனவும் பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – சாணக்கியன் எம்.பி கோரிக்கை..!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீது நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும்...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு முடிவுகள் வெளியானது

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின்...
- Advertisement -spot_img