Sunday, June 28, 2026
No menu items!

#topnews #srilankanews #tamilnews #srilanka #vettritv #vettrinews #trendingnews

தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 1,084 தொழுநோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழுநோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் நிரூபா பல்லேவத்த இதனைத் தெரிவித்துள்ளார். அவர்களில் 68 சதவீதமானோர் மற்றுமொருவருக்குத் தொழுநோயைப் பரப்பக்கூடியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகமான தொழுநோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலே பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 115 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

மியன்மார் இணையவழி மோசடி முகாமில் இலங்கையர்கள் இருப்பதாக தகவல் – விஜித ஹேரத்..!

மியன்மாரில் உள்ள இணையவழி மோசடி முகாமில் மேலும் 14 இலங்கையர்கள் உள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (06.12.2024) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதியில் சிக்கியிருந்த பலர் ஏலவே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். எனினும் இந்த பிரச்சினை தொடர்ந்தும்...

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை..!

குருணாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்வெஹெர பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் கடந்த வியாழக்கிழமை (05.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் வாரியப்பொல , தெமட்டலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடையவர் ஆவார். சம்பவத்தன்று, கொலை செய்யப்பட்டவர் இளைஞன் ஒருவருடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்துள்ள நிலையில் பணம்...

 இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (07.12.2024) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.20 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில்...

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு..!

மன்னார் மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு "தென்கிழக்கு லண்டன்/கென்ட்,  பகுதியில் வசிக்கும். "ஈழத்தமிழர் வர்த்தக சங்கம்" நேற்றைய தினம் (06.12.2024) அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்துள்ளது. மன்னார் மாவட்டத்தில்    பிரதேச செயலாளர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் கோரிக்கைக்கு  ஏற்ப  200 நபர்களுக்கு நுளம்பு நெற், பாய், பெட்சீட், துவாய் போன்ற பொருட்கள்...

தமிழ் அறிவு நூல் வெளியீட்டு விழா நாளை..!

காவேரி கலாமன்றம் மற்றும் தாய் நிலம் பதிப்பகம் இணைந்து நடாத்தும் கவிஞர் க.பே. முத்தையா நினைவு பேரூரையும், முத்தையாவின்  இலக்கண நூலான  தமிழ் அறிவு நூலின் ஏழாவது பதிப்பு  வெளியீடும் வரும் ஞாயிற்றுக் கிழமை (08.12.2024)  பிற்பகல் மூன்று மணிக்கு யாழ்ப்பாணக் கல்லூரியின் பட்டதாரிகள் கற்கை நிலையத்தில இடம்பெறவுள்ளது. பேராசிரியர் எஸ். சண்முகதாஸ் தலைமையில் இடம்பெறவுள்னள ...

சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை..!

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை (06.12.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் தெரிவித்தார். மேலும்...

மீன்பிடித்துக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி..!

வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று (06.12.2024) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த மற்றொரு நபர் சம்பவம் தொடர்பாக ஊர் மக்களுக்குத்...

பாடசாலை சீருடை தொடர்பில் வெளியான அறிவித்தல்..!

எதிர்வரும் காலங்களில் பாடசாலை சீருடைகளை தைத்து வழங்க எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாடசாலை சீருடை வழங்குவதில் ஏற்படும் விரயத்தை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாளுக்கான வானிலை..!

கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு...
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img