12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.

அதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை (06.12.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஜனவரி முதலாம் திகதி முதல் விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை தடுப்போம். அதற்கான வர்த்தமானியை அமுல்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டுள்ளோம். ஏனெனில் கடந்த அரசாங்கங்கள் இதனை 7-8 வருடங்களாக இழுத்தடிப்பு செய்தன. கடந்த வாரம் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தோம், அதை நாங்கள் இழுத்தடிக்க போவதில்லை. ஜனவரி முதலாம் திகதி முதல் இதை அமுல்படுத்துவோம்.” எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here