காவேரி கலாமன்றம் மற்றும் தாய் நிலம் பதிப்பகம் இணைந்து நடாத்தும் கவிஞர் க.பே. முத்தையா நினைவு பேரூரையும், முத்தையாவின் இலக்கண நூலான தமிழ் அறிவு நூலின் ஏழாவது பதிப்பு வெளியீடும் வரும் ஞாயிற்றுக் கிழமை (08.12.2024) பிற்பகல் மூன்று மணிக்கு யாழ்ப்பாணக் கல்லூரியின் பட்டதாரிகள் கற்கை நிலையத்தில இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் எஸ். சண்முகதாஸ் தலைமையில் இடம்பெறவுள்னள நிகழ்வில் நினைவு பேரூரையினை முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.
வரவேற்புரையினை கவிஞர் கு. றஜீவன் ஆசியுரையினை பேராயர் எஸ் ஜெபநேசன், வாழ்த்துரையினை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கிருஸ்ணகுமார், அதிபர் தேவராஜ் அவர்களும் ஆய்வுரையினை கவிஞர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயசீலனும், நன்றியுரையினை புத்திசிகாமணி அவர்களும் ஆற்றவுள்ளனர்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








