வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று (06.12.2024) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த மற்றொரு நபர் சம்பவம் தொடர்பாக ஊர் மக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். இதனையடுத்து மேற்படி நபரைத்  தேடும் பணி ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

நீண்டநேரமாகத் தேடுதல் இடம்பெற்று வந்த நிலையில் சிலமணி நேரங்களின் பின்னர் அவரது சடலம் நீருக்குள் இருந்து மீட்கப்பட்டது. சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த குரு என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here