Sunday, June 28, 2026
No menu items!

#topnews #srilankanews #tamilnews #srilanka #vettritv #vettrinews #trendingnews

இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது..!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இராமேஸ்வர மீனவர்கள் இன்று (05.12.2024) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (04.12.2024) காலை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இரண்டு...

பரவிவரும் புதிய வகை நோய்த்தொற்று..!

கொங்கோ குடியரசில் பரவிவருவிகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டு சுகாதாரத்துறை இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுமெனவும் அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இலங்கை – தென்னாப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்..!

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (05.12.2024) ஆரம்பமாகவுள்ளது. தென்னாப்பிரிக்காவின் செயின்ட் ஜோர்ஜ் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 233 ஓட்டங்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு அதிகரிப்பு..!

சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளமையை தொடர்ந்து தற்போது பல பகுதிகளில் உடைத்த தேங்காயும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சில பகுதிகளில் உடைத்த தேங்காயின் ஒரு பகுதியின் விலையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்காய் ஒன்று தற்போது 200 ரூபாவுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதேநேரம் உடைத்த தேங்காயின் ஒரு பகுதி 100 ரூபாவுக்கு...

நிதி மோசடி தொடர்பில் 13 வெளிநாட்டுப் பிரஜைகளை CID – இல் முன்னிலையாகுமாறு உத்தரவு..!

இணையவழி மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளில் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாட்டில் தங்கியுள்ள 13 வெளிநாட்டுப் பிரஜைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவர்களுக்குக் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேக...

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.75 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.31 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

வட மாகாண ஆளுநருக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதம தொழில்நுட்ப ஆலோசகருக்கும் இடையில் சந்திப்பு..!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று காலை புதன் கிழமை (04.12.2024) இடம்பெற்றது. கடந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் ஐ.எல்.ஓ. அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள்...

நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் மீட்பு..!

பரந்தன் பூநகரி, செல்வி புரம் பகுதியில் வீதியின் கரையில்  நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் ஒன்று இனம்காணப்பட்டுள்ளது. குறித்த சடலமானது பூநகரி பள்ளிக்குடா பகுதியைச் சேர்ந்த செல்லையா கனிஷ்டநாதன் என்ற (வயது 69) முதியவர் என இனம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறித்த சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ...

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு  அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுடன் கலந்துரையாடல்..!

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு  அமைச்சின் கீழ் இயங்கும்  நிறுவனங்களுடன் அவற்றின் தற்போதைய நிலையை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் போது தேசிய பொருளாதாரத்திற்கு மேலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கு இந்த நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துதல், திறமையான பொது சேவையின் மூலம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் மற்றும் வரவு செலவுத் திட்டங்கள்...

இன்றைய நாளுக்கான வானிலை…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த...
- Advertisement -spot_img

Latest News

32 மணி நேரம் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்க பேரழிவில், இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 18 நாள் ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இது இந்த பேரிடரில்...
- Advertisement -spot_img