Friday, August 14, 2026
No menu items!

#topnews #srilankanews #tamilnews #srilanka #vettritv #vettrinews #trendingnews

இன்றைய நாளுக்கான வானிலை..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில்...

நாடு திரும்பிய லெபனானில் தங்கியிருந்த இலங்கையர்கள்..!

மோதல் காரணமாக இன்னல்களுக்கு முகங்கொடுத்த நிலையில் லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். குறித்த 27 பேரும் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டை வந்தடைந்தவர்களில் 5 சிறார்கள், 3 பெண்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மோதல் காரணமாக லெபனானில் நிர்க்கதியாகியிருந்தவர்களில் இதுவரை 53 பேர் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

50 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் சுமார் 50 ஊழியர்கள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இன்று (05.12.2024) காலை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவை உண்டதாலேயே இந்த ஊழியர்களுக்கு மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கட்டுநாயக்க பொலிஸார்...

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – மக்கள் கவலை..!

நத்தார் பண்டிகை வருகின்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் அதிகரித்த விலையும் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒரு தேங்காய் 180-200 ரூபா வரை விற்பனையாகின்றது. இதே வேளை நாட்டு குத்தரிசிக்கு தட்டுப்பாடு நிலவுகின்றபோது 280 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நாளாந்த கூலி வேலைக்கு செல்கின்ற தொழிலாளர்கள் தற்போது மழை...

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு..!

வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள இடர்...

அதிக ஓட்டங்களைக் குவித்து சாதனையை படைத்த பரோடா அணி..!

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற சாதனையை பரோடா அணி படைத்துள்ளது. சயத் முஷ்தாக் அலி தொடரில் சிக்கிம் அணிக்கெதிரான போட்டியில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. குறித்த போட்டியில் பரோடா அணி 20 ஓவர்கள் நிறைவில் 349 ஓட்டங்களைக் குவித்தது. இதற்கு முன்னதாக காம்பியா அணிக்கெதிரான சிம்பாப்வே அணி பெற்றுக்கொண்ட 344 ஓட்டங்களே...

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு பிணை..!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்த ஆகியோருக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (05.12.2024) பிணை வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வயலில் இறங்கிப் போராட்டம்..!

தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரி தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் (05.12.2024) வியாழக்கிழமை வயலில் இறங்கிப் போராட்டம் செய்துள்ளனர். வெள்ளம் நிறைந்துள்ள "கிழக்கு வெளி வயல்" நிலத்தில் இறங்கி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தொண்டமனாறு தடுப்பணையை மூடி வைத்திருப்பதால் தென்மராட்சி...

இன்றைய தங்க நிலவரம்..!

தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05.12.2024) நிலையான விலையில் உள்ளது. கொழும்பு - செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் 193,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,250 ரூபாவாகவும், 22 கரட்...

மதுபானசாலை குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் – சபையில் சாணக்கியன்..!

நாடாளுமன்றில் நேற்று (04.12.2024) வெளியிடப்பட்ட புதிய மதுபானசாலை அனுமதி பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (05.12.2024) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. எனினும்...
- Advertisement -spot_img

Latest News

மிருகத்தனமாக தாக்கப்பட்டு கைவிடப்பட்ட சிறுமி மீட்பு

மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 4 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று (13)வத்தேகம - யட்டிரவண வீதியில் உள்ள...
- Advertisement -spot_img