15% ஆக இருந்த VAT வரி, இன்று (01) அதிகாலை முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் VAT வரி அமுலாகியுள்ளது.
எரிபொருள், இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள் ஆகியவற்றிற்கு புதிய VAT வரி விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, நகைகள், மென்பொருள், கொப்பரா, ரப்பர், முட்டை, தேயிலை, தேங்காய் எண்ணெய் மற்றும் திரவ பால் ஆகியவற்றையும் புதியவரிப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் திரைப்பட விநியோகம், கண்காட்சி மற்றும் ஆய்வக வசதிகள் மீதும் VAT வரி புதிதாக விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.