ஜனாதிபதி தேர்தலில் தற்ப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தங்களுடைய முழு ஆதரவை வழங்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ‘‘நெருக்கடியான நேரத்தில் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாத்தவர் ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் அவரே ஜனாதிபதியாக வர வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த கட்சியில் போட்டியிட்டாலும் அவருக்கே எமது ஆதரவு.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியானது இணக்க அரசியலை முன்னெடுத்து வரும் நிலையில் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கூடிய ஒருவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே உள்ளார்“ என கூறினார்.