லங்கா சதொச நிறுவனத்தினால் வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் இன்று (02) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வருமென தெரிவித்துள்ளது.
அதன்படி,
இறக்குமதி செய்யப்பட்ட 1kg சீன உருளைக்கிழங்கின் புதிய விலை ரூ. 240
1கிலோவெள்ளைகௌபி புதிய விலை ரூ. 998
1 கிலோ சிவப்பு கௌபி புதிய விலை ரூ. 940
இறக்குமதி செய்யப்பட்ட 1kg இந்திய பெ. வெங்காயம் புதிய விலை ரூ. 265
1கிலோகீரிசம்பாஅரிசிபுதிய விலை ரூ. 254
1கிலோசிவப்புசீனிபுதிய விலை ரூ. 370
1கிலோசிவப்புபருப்பு புதிய விலை ரூ. 285
1கிலோவெள்ளைசீனி புதிய விலை ரூ. 254 ஆகும்.