December 9, 2025
அனைவருடனும் இணைந்து கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் சுத்தப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளேன்  -ஹரின் பெர்னாண்டோ
News News Line Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

அனைவருடனும் இணைந்து கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் சுத்தப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளேன்  -ஹரின் பெர்னாண்டோ

Nov 28, 2023

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (27) விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இது மிக முக்கியமான பொறுப்பாகும். ஏனெனில் விளையாட்டு என்பது நாம் அனைவரும் விரும்பும் இடம். அதேபோல், இந்த விதிகளை மாற்றும் போது பின்பற்ற வேண்டிய பல நடைமுறைகள் உள்ளன. நான் யாருக்கும் எதிராகச் செயற்பட எதிர்பார்க்கவில்லை. அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட அனைவருடனும் ஒன்றிணைந்து இந்த கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் சுத்தப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளேன். அப்படி இல்லையென்றால் மக்கள் எதிர்பார்க்கும் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர நாம் அணிதிரள வேண்டும்” என விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *