ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ள கடல் முற்றுகை செயற்பாட்டை மீறி கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு கப்பலும் செல்லவில்லை என அமெரிக்காவின் யுனைடெட் ஸ்டேட்டஸ் சென்ட்ரல் கமாண்ட் தெரிவித்துள்ளது.

கடல் முற்றுகை நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் குறித்த பிரிவு முற்றுகை நடவடிக்கைகள் கடுமையாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

கடற்படை நடவடிக்கையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், போர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யுனைடெட் ஸ்டேட்டஸ் சென்ட்ரல் கமாண்ட் மேலும் தெரிவித்துள்ளது.

ஆறு வணிக கப்பல்கள் ஈரானிய துறைமுகங்களுக்கே மீண்டும் திரும்பியுள்ளதாக அமெரிக்க படைகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் முற்றுகை நடவடிக்கைக்கு பின்னர் ஈரானுடன் தொடர்புடைய 4 கப்பல்கள் ஹோர்மூஸை கடந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை ஊடாக ஈரானுடன் தொடர்பு கொண்ட கப்பல்களை மாத்திரம் தடுப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here