அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் சுப்பர் போல் விளையாட்டு நிகழ்ச்சிக்கு பின்னர் , மக்கள் பேரணி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றுதிரண்டிருந்த பேரணி முடிவில் கென்சாஸ் நகரின் ரயில் நிலையத்தில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
இதன் போது தொகுப்பாளர் ஒருவரான லீசா லோபஸ் என்பவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.