இலங்கையில் உள்ள பல பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக  தேசிய வள பாதுகாப்பு இயக்கத்தினால்  இன்றைய தினம்(21) ஆர்ப்பாட்டம்  ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய வள பாதுகாப்பு இயக்கம் அறிக்கையொன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,“மின்சாரம், தொலைத்தொடர்பு, காப்பீடு, தபால் நிலையங்கள், ரயில்வே, வங்கிகள், விமான நிலையங்கள் மற்றும் பல முக்கிய பொது நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற திட்டத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.

இந்த முன்னோடியில்லாத விற்பனையானது தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் இலங்கையர்களின் வாழ்வாதாரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here