தனக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்காமல் காலம் கடத்தி வந்த பியூட்டிஷியனின் காரை, இளம்பெண் ஒருவர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனை சேர்ந்தவர் பிரபல பியூட்டிஷியன் மார்ஷெல்லா இவர் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
இவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இவரிடம் இளம் பெண் ஒருவர், கண் பகுதியை அழகுப்படுத்துவதற்காக அப்பாயின்மென்ட் தரும்படி தொடர்ந்து கேட்டுள்ளார்.
அந்தப் பெண்ணுக்கு பலமுறை மார்ஷெல்லா, அப்பாயின்மென்ட் கொடுக்க முடியாமல் இழுத்தடித்து வந்துள்ளார். இறுதியாக ஒருமுறை அப்பாயின்ட்மென்ட் கேட்டும், மார்ஷெல்லா கொடுக்கவில்லை.
இதனால் கோபமடைந்த அந்தப் பெண், மார்ஷெல்லாவின் அழகு நிலையத்திற்குச் சென்று அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மார்ஷெல்லாவின் காரின் மேல் பெட்ரோலை ஊற்றி பற்றவைத்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை சிசிடிவி வீடியோ காட்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்ஷெல்லா வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள், மார்ஷெல்லாவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
நீங்கள் அந்தப் பெண்ணுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்காமல் காலம் கடத்தி கடுமையாக நடந்திருக்கக் கூடாது.
அதற்காக அந்தப் பெண் காரை எரித்தது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் என்று மார்ஷெல்லாவுக்கு ஆறுதலும் தேறுதலும் கூறி வருகின்றனர்.