Tamil News Channel

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்

55

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் உட்பட ஆறு பேர் மெல்பேர்னில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விக்டோரியா மாகாணத்தில் சட்டவிரோதமாக 10 மில்லியன் சிகரெட்டுகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 வயதான இலங்கையரால் இந்த மோசடி வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர், மெல்பேர்னில் உள்ள பிரபல குற்றக் குடும்பத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஏனைய 5 சந்தேகநபர்களும் 31, 35 மற்றும் 40 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts