மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தோனேஷியா செல்லவுள்ளார்.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த விஜயத்தின் போது , மே 18 முதல் 20 ஆம் திகதி வரை இந்தோனேசியாவில் நடைபெறும் உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி மே 20 ஆம் திகதி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
இந்தோனேசிய ஜனாதிபதி விடோடோ உட்பட உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.