Saturday, November 7, 2026
No menu items!

இந்தோனேஷியா

இந்தோனேசியாவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவு 

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்க தொடரை அடுத்து இன்று (17)மீண்டும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையத்தின் அறிவிற்புக்கமைய, இன்று அதிகாலை புளோரஸ் பகுதியில் ரிக்டர் அளவில் 5.9 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ரிக்டர் 7.7 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல அதிர்வுகளும் பதிவாகின. அந்த நிலநடுக்கத்தில்:47...

இந்தோனேசிய நிலநடுக்கம்: துயரத்தை பகிர்ந்து கொண்ட இலங்கை

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு கடற்கரையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த அதிர்வுகளை அடுத்து, இலங்கை தனது ஒத்துழைப்பை வெளியிட்டுள்ளதோடு துயரத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர்.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோர்  இடம்பெயர்ந்துள்ளனர். பாரிய நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து...

அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி!!

வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக், தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் இலங்கை...

இந்தோனேஷியாவின் வரிகளை குறைத்தது அமெரிக்கா..!

இந்தோனேஷியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தோனேஷிய இறக்குமதிகள் மீதான திட்டமிடப்பட்ட வரிகளை 32 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகக் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஈடாக, இந்தோனேஷிய சந்தைகளில் சுங்கவரி மற்றும் சுங்கவரி இல்லாத தடையற்ற அணுகலை அமெரிக்கா பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தோனேஷியா இது குறித்த அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல்களை...

இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்யவுள்ள புனித திருத்தந்தை பிரான்சிஸ்……!

புனித திருத்தந்தை பிரான்சிஸ் நாளை (03) இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே பாப்பரசர் இந்தோனேஷியா வருவதாகவும் சமய ஒற்றுமையின் பிரதிபலிப்பாக, தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள முக்கிய முஸ்லிம் மசூதியையும் கத்தோலிக்க தேவாலயத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையையும் பாப்பரசர் மேற்பார்வையிடுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சுரங்கப்பாதைக்கு நட்பு சுரங்கப்பாதை...

இந்தோனேஷியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க  இந்தோனேஷியா செல்லவுள்ளார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின்  அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விஜயத்தின் போது , மே 18 முதல் 20 ஆம் திகதி வரை இந்தோனேசியாவில் நடைபெறும் உலக நீர் உச்சி மாநாட்டில் ...

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை!!!

மேற்கு இந்தோனேஷியாவில் வார இறுதியில் திடீர் வெள்ளம் மற்றும் எரிமலையிலிருந்து பெருக்கெடுத்த குழம்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 17 பேர்  காணாமல்போயுள்ளதாக சுமாத்ரா அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை பல மணிநேரம் பெய்த கடும் மழையால் இந்தோனேசியாவின் மிகவும் தீவிரமான எரிமலைகளில் ஒன்றான மராபி  எரிமலையில் இருந்து பாறைகள்...

செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த பெண்..!

இந்தோனேஷியாவில்  செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்ற பெண் ஒருவர் எரிமலை பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று  பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவின் - இஜென் எரிமலையை பார்க்கச் சென்ற பெண் ஒருவரே எரிமலை பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்து இவ்வாறு உயிரிழந்துள்ளார். சீனாவைச் சேர்ந்த 31 வயதான குறித்த பெண் இஜென் எரிமலை நீல நிறத்தில் காட்சியளித்ததை பார்த்து எரிமலைக்கு மிக...

திருகோணமலை கடற்கரையில் தொடர்ச்சியாக குவியும் வெளிநாட்டு குப்பைகள்  

திருகோணமலை கடற்கரையோரத்தில் தற்போது அதிகளவு குப்பைகள் குவிந்து வருவதாகவும், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை  நேற்றைய தினம் (11) தெரிவித்துள்ளது. தற்போது கடற்படை மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியை திருகோணமலை மாநகர சபை மேற்கொண்டு...
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img