நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக க் ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நாட்களில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி வைரஸ் தொற்றுகள் பதிவாகி வருவதாகவும் அவர்களில் இன்புளுவன்சா ஏ தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காய்ச்சலுடன் இருமல், சளி, தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது காய்ச்சலாக இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் குளிர் காலத்தில் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவும் எனவும், வைரஸ் பரவாமல் தடுக்க முகக் கவசங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்ப்ளூயன்ஸா வைரஸ் என்பதால் தடுப்பூசிகள் இல்லை எனவும் பாராசிட்டமால் மருந்தை செலுத்தி, தண்ணீர் மற்றும் இயற்கையான திரவங்களை எடுத்துக் கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.