தென்மேல் பருவப்பெயர்ச்சியின் காரணமாக  நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையையும் தொடரக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின்  சில இடங்களிலும் 150 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும்  வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்திலும் சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் காற்று வீசும் கூறப்பட்டுள்ளது

ஆகவே கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here