January 13, 2026
இருளில் மூழ்கிய இலங்கையின் பல பகுதிகள்!
புதிய செய்திகள்

இருளில் மூழ்கிய இலங்கையின் பல பகுதிகள்!

May 25, 2024

சீரற்ற காலநிலையினால் இலங்கையில் 431, 500 பேர் மின் தடை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின் தடை தொடர்பில் நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மீள பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் (24) வரையில் 330,000 பேருக்கான மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் கடந்த 4 நாட்களில் 59,400 மின்சார செயலிழப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும்,3300,000ற்கும் அதிகமான முறைப்பாடுகளுக்கு அமைய மின் தடங்கல்களைச் சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *