முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார உட்பட 6 சந்தேக நபர்களை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

பண கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறித்த நபர் ஒவ்வொருவருக்கும் ரூ. 500,000 ரொக்க பிணை வழங்கப்பட்டது.

அத்துடன் வெளிநாட்டு பயண தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 21 ஆம் திகதி சீன பிரஜை ஒருவரிடமிருந்து ரூபாய் 20 மில்லியன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த குழுவினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here