வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் எனவும், மணிக்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்படையினரும், மீனவ சமூகத்தினரும் இது தொடர்பில் மிகவும் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here