பசறை டெமேரியா (ஏ) தோட்டம் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த 25 மற்றும்30 வயதுடைய இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பின்னர் கைக்கலப்பாக மாறியதில் ஒருவர் குறித்த வீட்டுக்கு தீவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு 10.30 மணியளவில் நடைபெற்றது.
குறித்த சம்பவத்தில் தீயினால் வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.