Tamil News Channel

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய Urbanrisers அணி

நடைபெற்றுவரும் 2023/2024 இற்கான லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சுரேஸ் ரைனா தலைமையிலான Urbanrisers Hyderabad அணி முதலாவது தகுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று (05) சூரத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மொஹம்மட் கைஃப் தலைமையிலான Manipal Tigers அணியை 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Manipal Tigers அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Urbanrisers Hyderabad அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் டுவைன் ஸ்மித் 120 ஓட்டங்களையும், பந்து வீச்சில் பங்கஜ் சிங் மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

254 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Manipal Tigers அணி 16.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

2 ஆம் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் அஞ்சலோ பெரேரா அதிக பட்சமாக 73 ஓட்டங்களையும், பந்து வீச்சில் ஜெரோம் டெய்லர் மற்றும் பீட்டர் ட்ரெகோ தலா 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக டுவைன் ஸ்மித் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் நடைபெறவுள்ள வெளியேற்றல் போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையிலான India Capitals அணியும் பார்தீவ் படேல் தலைமையிலான Gujarat Giants அணியும் மோதவுள்ளன.

இதில் வெற்றி பெறும் அணியும் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த அணியும் நாளைய தினம் 2 ஆவது தகுதி போட்டியில் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts