நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள சி.ஜோசப் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெற்று வரும் தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அவரது கட்சியான தமிழக வெற்றி கழகம் (TVK) முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் TVK முன்னிலை வகிப்பதால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் பெரும்பான்மையை விஜய் நெருங்குவார் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால், இறுதி முடிவு நிச்சயமற்றதாகவே உள்ளது.

இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், கட்சியால் அந்த இலக்கை அடைய முடியாத பட்சத்தில்,பெரும்பான்மையைப் பெறுவதற்கு விஜய்க்கு சிறிய கட்சிகளின் ஆதரவு தேவைப்படலாம்.

தொங்கு சட்டமன்றம் அமைக்க வேண்டிய சூழலில், அரசாங்கம் அமைப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் போன்றவற்றின் ஆதரவு முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here