2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்றையதினம் (03.06.2024) இடம்பெற்ற முதற்சுற்று போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றியடைந்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குசல் மெந்திஸ் 19 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 16 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
மேலும் பந்து வீச்சில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் வேகபந்து வீச்சாளர் என்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, 78 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
தென்னாபிரிக்கா அணி சார்பில் டி கொக் அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.