இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அணிசேரா மாநாட்டுக்காக உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் கடந்த 21ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி வாக்கெடுப்பில் 184 வாக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும், 137 வாக்குகaளை சுமந்திரனும் பெற்றனர்.
மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சி வரலாற்றில் தலைவர் ஒருவர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.