க.பொ.த சாதாரண தர  பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் (23) பெப்ரவரி 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், விண்ணப்பங்களை நிகழ்நிலையில் மாத்திரமே விண்ணப்பிக்க  முடியும் என பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், சகல பாடசாலை விண்ணப்பதாரிகளும் பாடசாலை அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையிலும் உரிய அறிவுறுத்தல்களுக்கமைய நிகழ்நிலையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அத்துடன் அரச பாடசாலை அல்லது அரசினால் அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலையிலிருந்து விலகி, விடுகைப் பத்திரத்தை பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகள் மாத்திரமே இப்பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.

இவ்வாண்டு தொடக்கம் O/L பரீட்சைக்காக விண்ணப்பிக்கவுள்ள சகல தனிப்பட்ட விண்ணப்பதாரிகளிடமும் தேசிய அடையாள அட்டை இருப்பது கட்டாயமானதாகும்.

தேசிய அட்டை இல்லாத 15 வயதுக்கு குறைவாக உள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் O/L பரீட்சைக்காக தோற்றுவதற்கு எதிர்ப்பார்ப்பின், பரீட்சைத் திணைக்களத்துக்கு வருகை தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்பவற்றுக்குள் நுழைந்து உரிய அறிவுறுத்தல்களை நன்கு வாசித்து அதற்கமைய பிழையின்றி விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here