இலங்கை தொடர்பான இரண்டாவது மதிப்பாய்வை அடுத்து அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த மாதத்திற்குள் தொடர்ச்சியான வரி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய  டிஜிட்டல் சேவையுடன் தொடர்புபட்ட துறைகளிற்கும் பெறுமதி சேர் வரியை அறவிடுதலும் மற்றும்  ஏற்றுமதி சேவைகளிற்கு தற்போது விதிக்கப்படும் வருமான வரியில் விலக்களிக்கப்படுவதும் முக்கிய திருத்தங்களாக கூறப்படுகின்றது.

மேலும்  விற்பனைச் செயற்பாடுகளுக்கு அறவிடப்படும் சமூக பாதுகாப்பு வரிக்கு பதிலாக பெறுமதி சேர் வரியும் அறவிடப்படக் கூடும்.

இதேவேளை மதுபானம், புகையிலை மற்றும் விளையாட்டு நிறுவனங்களுக்கு அறவிடப்படும் வர்த்தக வருமான வரி 40 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு அமைய, இவ்வாறான பல புதிய வரிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறையாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here