லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் பிரதி தலைவரான சலே அல் அரூரி கொல்லப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் குறைந்தது 05 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் அமைப்பு செவ்வாய்க்கிழமை மாலை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் அங்கு போர் பதற்றமானது மேலும் அதிகரித்துள்ளது.
ஹமாசின் பிரதி தலைவர் அதன் இராணுவப்பிரிவில் முக்கியமானவராகவும் ஹமாசிற்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் முக்கிய தொடர்பாளராகவும் காணப்பட்டமை குயிப்பிடத்தக்கது.
இத் தாக்குதல் ஹமாசிற்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட தாக்குதல் என இஸ்ரேல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.