ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இரங்கல் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஈரான் ஜனாதிபதியின் மரணம் குறித்த துயரச் செய்தி ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது தலைமை ஈரானின் அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அவரது சமீபத்திய இலங்கை விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தியது.
இந்த கடினமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ஈரான் மக்களுடனும் இருக்கின்றது” என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.