அனுராதபுர மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது இலக்கு வைத்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் அவர் மூலமாகவே திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உத்திக பிரேமரத்ன மற்றும் குறித்த பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அத்தியட்சகர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரிடம் தனது துப்பாக்கியை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு தற்போது தனது குடும்பத்துடன் கனடாவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.